#
New

B.R. Ambedkar TNPSC Tamil

TNPSC தேர்வில் பி.ஆர். அம்பேத்கரைப் பற்றி கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இக்கட்டுரை படிப்பதன் மூலம் நீங்கள் எளிதில் பதில் அளிக்கலாம்.

                                                             B.R. Ambedkar TNPSC Tamil| Emergence of Leaders

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

 

நூறு ஆண்டுகளுக்கு முன், இந்திய மக்கள் பிறப்பால் அனைவரும் சமம் என்பதை உணராமல், ஒருவன் செய்யும் தொழிலை வைத்து உயர்ந்தவன், தாழ்ந்தவன் என வேற்றுமை ஏற்படுத்தி வாழ்ந்துகொண்டு வந்தனர். தாழ்வானவர்கள் எனக் கருதப்பட்ட மக்களை சம-மரியாதையின்றி,புறக்கணிக்கபட்டவர்களாகவும்,தீண்டதகாதவர்களாகவும் நடத்திவந்தனர் தங்களை தாங்களே உயர்வானவர்கள் எனக் கருதிய மக்கள். இதனால் தாழ்வானவர்கள் எனக் கருதப்பட்டு வந்த மக்கள் மிகுந்த இன்னல்களுக்கு ஆளானார்கள். செய்யும் தொழிலால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் எனக் கருதி வாழ்ந்து கொண்டிருந்த சமூகத்தில் பிறந்து, உயர்ந்தவர்கள் எனக் தங்களை கருதிக் கொண்ட மக்களிடம் பல இன்னல்களுக்கு ஆளாகி, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவன் கூறிய கருத்தை அனைத்து மக்களிடமும் விதைத்து, இந்தியாவில் சமத்துவத்தை மலரச் செய்த அம்பேத்கர் அவர்களைப் பற்றி TNPSC தேர்வுகளுக்கு பயன்படும் வகையில்  இங்கு காண்போம். 

 

பிறப்பு

  • அம்பேத்கர் மத்திய பிரதேசத்தில் உள்ள மாவ் என்னும் இடத்தில் 14 ஏப்ரல் 1891 ஆன்று பிறந்தார்.
  • அம்பேத்கரின் தந்தை பெயர் ராம்ஜி சக்பால் மற்றும் தாயாரின் பெயர் பீமாபாய் சக்பால்.
  • அம்பேத்கரின் இயற்பெயர் பீமாராவ் ராம்ஜி.
  • அம்பேத்கர் தனது ஆசிரியர் கிருஷ்ணா கேசவ் அம்பேத்கர் மீது கொண்ட பற்றால் தன்னுடைய பெயரை பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என மாற்றிக்கொண்டார்.

 

காலக் கோடு

  • “பழங்கால இந்திய வர்த்தகம்“ (1915ல் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பிற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை),“இந்தியாவின் தேசிய பங்கீடு பற்றிய வரலாறு மற்றும் பகுப்பாய்வு ஆய்வறிக்கை” (முனைவர் பட்டத்திற்காக சமர்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை) என்ற இரண்டு நூல்களிலும் அவருடைய பொருளாதார கருத்துக்கள் காணப்படுகின்றன.
  • மே 1916- “இந்தியாவில் சாதிகள்”  என்ற கட்டுரை இதழ்களில் வெளியான அம்பேத்கரின் முதல் கட்டுரையாகும்.
  •   1918ல் அம்பேத்கர் “இந்தியாவில் குறைந்த நிலவுடமை மற்றும் தீர்வுகள்” என்ற கட்டுரையை எழுதினார். ஆடம்ஸ்மித்தின் ‘நாடுகளின் செல்வத்தைப் போல்’ நிலவுடைமை ஒருங்கிணைப்பு மற்றும் நிலவுடைமை விரிவாக்கம் இவற்றிற்கிடையேயான வேறுபாட்டினை கூறுகிறார்.
  • தாழ்த்தப்பட்ட மக்களாக கருதப்படுபவர்களின் குரல்களை சமூதாயத்தில் எதிரொலிக்க மூக்நாயக் என்ற பத்திரிக்கையை அம்பேத்கர் தொடங்கினார்.
  • 1921ல் அம்பேத்கருடைய பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதி பரவலாக்கள் என்ற ஆய்வுக் கட்டுரை M.Sc பட்டத்திற்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • மேலும் 1923ல் 'ரூபாயின் பிரச்சனைகள்' என்ற ஆய்வறிக்கையை ஏற்று லண்டன் ப�ொருளாதார பள்ளி D.Sc பட்டம் வழங்கியது.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது அம்பேத்கர் நூலான “ரூபாயின் பிரச்சினைகள் அதன் தோற்றமும் அதன் தீர்வும்“ என்பதில் வழங்கப்பட்ட வழிகாட்டுதலின்படி கருத்தாக்கம் பெற்றது.
  • 20th July 1924- தாழ்த்தப்பட்ட மக்களை உயர்த்த பகிஸ்கிரித் ஹித்காரனிய சபையை தொடங்கினார். கல்வி,கிளர்ச்சி மற்றும் ஒழுங்கமைத்தலை இச்சபையின் நோக்கமாயிருந்தது.
  • தீண்டதகாதவர்கள் என்று கருதப்பட்ட மக்களுக்கு, சாவ்தர் குடிநீர் தொட்டியை  பயன்படுத்தும் உரிமையை பெற மகராஷ்ட்ராவில் உள்ள மகத் என்னும் இடத்தில் சத்தியாகிரகப் போராட்டத்தை மேற்கொண்டார்.
  •   3rd April 1927 பகிஸ்கரித் பாரத்  என்ற பத்திரிக்கையை தொடங்கி அதற்க்கு பதிப்பாசிரியராக செயல்பட்டார்.
  • September 1927- சமாஜ் சமதா சங்கத்தை நிறுவினார்.
  • 1930-32 இந்தயாவின் தீண்டதகாதவரகளின் சார்பாக வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்றார்.
  • September 1932- காந்தியுடனான பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
  • 13th October 1935- புகழ் பெற்ற ஏலோ மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களை இந்து மதத்திலிருந்து வெளியேறி வேறு மதத்திற்கு மாற அம்பேத்கர் வலியுறுத்தினார். நான் இந்துவாக பிறந்தேன் ஆனால் ஒரு இந்துவாக இறக்கமாட்டேன் என அம்பேத்கர் இம்மாநாட்டில் கூறினார்.
  • December 1935- வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையான சாதி ஒழிப்பு உரையை அம்பேத்கர் நிகழ்த்தினார். மேலும் இந்த உரையை ஒரு புத்தகமாக அம்பேத்கர் 1937ல் வெளியிட்டார்.
  • August 1936-சுதந்திர தொழிலாளர் கட்சியை உருவாக்கினார்.
  • May 1940 அம்பேத்கர் மகர் பஞ்சாயத்தை உருவாக்கினார்.
  • 25th May 1941- மஹர் வம்ச பஞ்சாயத்து சமிதி
  • April 1942- அகில இந்திய பட்டியல் சாதிகள் கூட்டமைப்பை அம்பேத்கர் நாக்பூரில் உருவாக்கினார்.
  • December 1942- இந்தியாவில் தீண்டதகாதவர்களின் பிரச்சனை என்ற கட்டூரையை சமர்பி்த்தார்.
  • 1944- நம்பிக்கை உருவாக்குதல் மற்றும் பட்டியலினத்தவர்கள் முன்னேற்றக்க அறக்கட்டளையை உருவாக்கினார்.
  • July 1944- மக்கள் கல்வி சமூகத்தை பம்பாயில் உருவாக்கினார்.
  • 1946- அம்பேத்கர் வரைவு குழுவின் தலைவரனார்.
  • July 1951-பாரதிய புத்த ஜனசங்கத்தை உருவாக்கினார்.
  •   1956 ஆம் ஆண்டு இறந்தார்.
  • 1990- அம்பேத்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

சிறப்பு பெயர்கள்

  •    பாபா சாஹேப் 
  • இந்திய அரசியலிமைப்பின் தந்தை

புத்தகங்கள்

  •       இந்துமதத் தத்துவம்
  • தீண்டப்படாதவர்கள் யார்
  • மஹத் சத்தியாகிரகம்
  • பண்டைய இந்தியாவில் புரடச்சியும் எதிர் புரட்சியும்.