#
New

Bhagat singh TNPSC notes in tamil|பகத் சிங்

TNPSC தேர்வில் பகத் சிங் (Bhagat Singh) பற்றி கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இக்கட்டுரை படிப்பதன் மூலம் நீங்கள் எளிதில் பதில் அளிக்கலாம்.

நாம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட இளையர்களை நினைவு கூறும்போது, நம் நினைவிற்கு முதலில் வருவது பகத் சிங். இவர் ஏன் நம் நினைவிற்கு முதலில் வருகிறார்? பகத் சிங் அவர்கள் பெரும்பாலான இளைஞர்கள் போல் மனைவி,குழந்தைகள் என்று இல்லாமல், நம் நாட்டை ஆங்கிலேயர்களிதமிருந்து மீட்க பல புரட்சிக்கரமான செயல்களை செய்து, ஆங்கிலேயர்களுக்கு மிகுந்த நெருக்கடியை கொடுத்தார். இக்காரணத்தால் 23 வயதில் ஆங்கிலேயர்களால் மரண தண்டணை விதிக்கப்பட்டு நம் நாட்டிற்க்காக  தனது உயிரை தியாகம் செய்த பகத் சிங்கின் வாழ்க்கைப் பற்றி TNPSC தேர்வுகளுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரையில் காண்போம்.

 

பகத் சிங் காலக்கோடு

  • பகத் சிங் 28 செப்டம்பர் 1907 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள,யால்பூர் மாவட்டம், பங்கா என்னும் ஊரில் பிறந்தார்.
  • இவரின் தந்தைப் பெயர் கிஷன் சிங் சந்து மற்றும் தாயார் பெயர் வித்யாவதி கவுர்.
  • லாகூரில் உள்ள தயானந்த் ஆங்கிலோ வேதிக் கல்லூரியில் பயின்றார்.
  • லாலா லஜ்பத்திராய் நிறுவிய தேசிய கல்லூரியில் இணைந்து, ஐரோப்பிய புரட்சிகர இயக்கங்கள் பற்றி கற்றார்
  • 1919ல் நடந்த பஞ்சாப் படுகொலை மற்றும் 1921 ல் நடந்த அகாலி மக்கள் படுகொலை, இவர் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
  • பகத் சிங் காந்தியின் அகிம்சை கொள்கையை ஆரம்பத்தில் பின்பற்றினார்
  • காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்தார்.
  • காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை கைவிட்டபோது, அகிம்சை வழியை கைவிட்டு புரட்சிகர இயக்கத்தில் சேர்ந்தார்.
  • 1926ல் நவ்ஜவன் பாரத் சபாவை நிறுவினார். தொழிலாளிகள் மற்றும் இளைய விவசாயிகளை பயன்படுத்தி மார்க்சிஸட் கொள்கைகளை பரப்ப  இச்சபையை உருவாக்கினார்
  • 1927ல் ராம் பிரசாத் பிஸ்மில் நிறுவிய,இந்துஸ்தான் சோசலிஸ்ட் குடியரசுக் கழகம் அல்லது ஹிந்துஸ்தான் குடியரசு சங்கத்தில் இணைந்தார்.
  •  சைமன் குழுவை எதிர்த்து போராடிய லால லஜ்ப்த்ராயை கொன்ற ஆங்கிலேய அரசை பழிவாங்க துடித்தார்.
  • லாலா லஜ்பத்ராயின் இறப்புக்கு பழிவாங்கும் வகையில், பகத்  சிங் லாகூரில் காவல்துறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட்டை கொல்ல முயன்ற போது தவறுதலாக உதவி காவல் கண்காணிப்பாளர் ஜான் சாண்டர்சை சுட்டுக் கொன்றார்கள் பகத் சிங்,ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர்.(இவர்கள் கைதுக்கு பின் இவர்கள் மீது சாட்டப்பட்ட வழக்கை ஆங்கிலேயர்கள் லாகூர் சதி வழக்கு என்று அழைத்தனர்)
  • மேலும் பகத் சிங் மற்றும் பக்தகேஷ்வர் தத்  1929 ஆம் ஆண்டு, டெல்லியில் உள்ள மத்திய சட்டசபை மண்டபத்தில் குண்டு வெடித்தனர்.
  • மார்ச் 23 1931 அன்று பகத் சிங்,ராஜ்குரு  லாகூர் சதி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். 

பகத் சிங் வேறு சிறப்புகள்

  • பகத் சிங் கீர்த்தி மற்றும் வீர் அரஜூன் போன்ற செய்திதாள்களுக்கு ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
  • பகத் சிங் சாகித்,ரஞ்சித், பல்வன்த்,வித்ரோகி என பல சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
  • இன்குலாப் சிந்தாபாத் என்பது பகத் சிங்கின் முழக்கமாய் இருந்தது.
  • நான் ஏன் கடவுள் மறுப்பாளராய் இருக்கிறேன் என்பது பகத் சிங்கின் படைப்பாகும்.